Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனத்தின் மூலம் சுவையூட்டும்… சாதம் ரெசிபி…!!

தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி                                  – அரை கிலோ
மிளகாய் வற்றல்          – 3
பெருங்காயம் பொடி – தேவைக்கேற்ப
தேங்காய்                         –  ஒரு மூடி
உளுந்தம் பருப்பு         – அரை ஸ்பூன்

செய்யும் முறை: 

முதலில் 1/2 கிலோ அரிசியை நல்ல பக்குவத்தில் சாதகமாக வடித்து கொள்ளவும். தேங்காயை பூ போல திருவி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் போட்டு நன்றாக வெடிக்க விடவும்.

அத்துடன் தேங்காய் பூவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு அதனுடன் வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும். இத்துடன் உப்பு சேர்த்து கிளறினால் சுவையான தேங்காய் சாதம் தயார்.

Categories

Tech |