ரசாயன பொருட்களை, முகத்திற்கு உபயோகிப்பதால் அதிகமான முகப்பருக்கள் ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய சில வழிகள்:
குளிர்காலத்தில், பலருக்கும் சரும வறட்சி, சரும உரிதல் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். குளிர்ச்சி அதிகமான காலநிலையில் சருமம் பலவித பிரச்சனைகளை சந்திக்கும். அதனால் சருமத்தின் ஈரத்தன்மையைப் பராமரிக்க மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம். அதே வேளையில் சருமதிற்கு தொந்தரவு வராமல், பொலிவுடன் இருக்க சில உணவுகளை உட்கொண்டால், அது சரும அமைப்பை மேம்படுத்தி, பொலிவு பெற, பல்வேறு உணவுகள் இருக்கின்றன. அது என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சூரியகாந்தி விதைகள்:
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளதால், அது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது. வைட்டமின் ஈ, சருமத்தில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதற்கு சூரியகாந்தி விதைகளை வறுத்து ஸ்நாக்ஸ் மாதிரியோ, அல்லது சாலட் மீது தூவியும் சாப்பிட்டு வரலாம்.
சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய்:
சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாயில் கரோட்டின் சத்து நிறைந்துள்ளது. இந்த கரோட்டின் சத்தானது உடலினுள் சென்று வைட்டமின் ஏ-வாக மாறுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமின்றி, வெயிலால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுக்கிறது. கரோட்டின் நிறைந்த குடைமிளகாய் சரும நிறத்தை அதிகரித்து, சரும பொலிவை மேம்படுத்தவும் உதவும்.
அவகேடோ:
அவகேடோ, ஆரோக்கியமான கொழுப்புக்கள் முழுமையாக நிறைந்துள்ளது. இந்த கொழுப்புக்கள், சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மை அளித்து, வறட்சியடைவதை தடுக்கும். அவகேடோவில் இருக்கும் வைட்டமின் ஈ, சரும பாதிப்பைத் தடுக்கும்.