Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பரோட்டாக்கு… இவ்ளோ டேஸ்டா… சால்னா செய்ய முடியுமா?

கறி சால்னா செய்ய தேவையான பொருட்கள்:

கறி                                   – 1/4 கிலோ
தக்காளிப்பழம்         – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
நல்லெண்ணெய்       – 4 கரண்டி
தேங்காய்                      – ஒரு மூடி
உப்பு, மஞ்சள்              – தேவைக்கேற்ப
வத்தல்                             – 8
சீரகம்                               – 2 தேக்கரண்டி

செய்முறை:

மிக்ஸி ஜாரில் வெங்காயம், வற்றல், சீரகம் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தக்காளிப் பழத்தையும், அரைத்த மசாலாவையும் போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.

அதனுடன் கறி, தேங்காய் பால், உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூடி நன்றாக வெந்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். தேங்காய் பாலுக்கு பதில் தேங்காய் சில்லை நன்றாக அரைத்துப் போடலாம். சுவையான சால்னா ரெசிபி ரெடி. இதை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட அருமையா இருக்கும்.

Categories

Tech |