Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கீரை தண்ணீச்சாறு… இரும்பு சத்து மிகுந்தது…!!

கீரை தண்ணிச்சாறு செய்ய தேவையான பொருட்கள்:

கீரை                 – ஒரு கட்டு
எண்ணெய்    – 100 கிராம்
வெங்காயம்  – 1
தக்காளி          – 1
பூண்டு              – 6
புளி                     – சிறிதளவு
தேங்காய்        – தேவைக்கேற்ப

செய்முறை: 

முதலில் கீரையை நறுக்கி கழுவி, அதில் உப்பு போட்டு வேக விட வேண்டும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் வதக்கியவற்றை குழம்பில் போட்டு கொதிக்கவிட்டு, புளி கரைத்து ஊற்றவும். இறுதியில் தேங்காய்ப் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

குறிப்பு:

இதற்கு முளைக் கீரை, பசலைக் கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

Categories

Tech |