Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பால் கொழுக்கட்டை… செய்ய ரெடியா… இதை பாருங்க…!!

பால் கொழுக்கட்டை செய்ய  தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி                                                    – 200 கிராம்,
தேங்காய்த் துருவல்                          – ஒரு கப்,
பொடித்த வெல்லம்                            – ஒரு கப்,
ஏலக்காய்தூள்                                        – சிறிதளவு,
காய்ச்சிய பால்                                        – 250 மில்லி.

செய்முறை:

பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து, நன்கு களைந்து, தேங்காயுடன் சேர்த்து மிக்ஸிஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் அரைத்து வைத்த மாவைப் சேர்த்து  கெட்டியாகக் கிளறியவுடன், நன்கு ஆற வைத்து பின்பு  சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை  ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும், அதில் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு காய்ச்சி இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.

Categories

Tech |