புதினா துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – 100 கிராம்
தேங்காய் – ஒரு சில்
எலுமிச்சம்பழம் – அரை மூடி
மிளகாய் – 3
செய்முறை:
புதினா இலையை ஆய்ந்து கழுவி, அதனுடன் மிளகாய், தேங்காய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.
அரைத்து முடிக்கும்போது அதனுடன் அரை தேக்கரண்டி சீனி சேர்த்து எடுக்கவும். இதை தாளிக்காமல் ரொட்டி மற்றும் சப்பாத்திக்கு உபயோகிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.