நாண் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா – 500 கிராம் (8 நாண்)
ஈஸ்ட் – கால் தேக்கரண்டி (வெதுவெதுப்பான சீனி சேர்த்த தண்ணீரில் கலந்து 8 நிமிடம் வைத்திருக்கவும்.
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மைதாவை சலித்து பாத்திரத்தில் போடவும். பின்பு வெண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து ஒன்று சேர பிசையவும்.
பின் தேவையான அளவு பூரி மாவு மாதிரி இடிக்கும் படி தண்ணீர் சேர்த்து ஈரத்துணி போட்டு மூடி தனியே 3-4 மணி நேரம் அடுப்பில் சூடு அல்லது எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மேல் வைத்தால் மாவு நன்கு ரொட்டி மாதிரி எழும்பிவிடும்.
அந்த மாவை பரோட்டா அளவு பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்து, கனமாக பலகையில் நீண்ட வட்ட முட்டை வடிவில் இட்டு, தோசைக்கல்லில் போட்டு சப்பாத்தி மாதிரி எடுக்கலாம். அல்லது தந்தூரி அடுப்பில் போட்டு எடுக்கலாம். நாண் ரெசிபி தயார்.