ஆம்லெட் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 5
சிகப்பு மிளகாய் – 6
புளி – நெல்லிக்காய் அளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – சிறிய துண்டுகளாக
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
மிக்ஸி ஜாரில் தேங்காய், தனியா, சீரகம், சிகப்பு மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம், அரைத்த மசாலாவையும் கொட்டி நல்ல வாசனை வரும் வரை கிளறி விடவும்.
பிறகு போதிய அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதனோடு அடித்து வைத்த முட்டையில் ஆம்லெட் தயாரித்து கொண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அந்த துண்டுகளை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்குப் பின் அடுப்பிலிருந்து இறக்கி நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி பரிமாறவும்.