ராகி முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
கடலை மாவு – 1/4 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
எள் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், எள், வெண்ணெய் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அதனை அடுத்து அகன்ற கடாயை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றி கொள்ளவும்.
பின்பு முறுக்கு சுத்தும் உழக்கை எடுத்து, அதில் பிசைந்த மாவை சிறிது வைத்து, பின்பு அதனை ஒரு காட்டன் துணியை விரித்து, அதில் முறுக்கு போன்று பிழிந்து கொள்ளவும்.
அதன்பின் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுத்து பரிமாறினால் சுவையான ராகி முறுக்கு ரெடி.