முட்டை கட்லெட் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 6 கேரட் துருவல் – அரை கப்
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
மிளகாய் – 6-8
இஞ்சி – சிறு துண்டு
சோம்பு – அரை தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
தேங்காய் – ஒரு மூடி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி பழம் – மூன்று
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மல்லி செடி – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
முதலில் பூண்டு இஞ்சியை தனியாக அரைத்துக்கொள்ளவும். பின்பு மிளகாயை வதக்கி மை போல் அரைத்து கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, சீரகம், கசகசா ஆகியவற்றை தனியாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு முட்டையை நன்றாகக் கடைந்து, அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டுக்கடலை மாவு கால் தேக்கரண்டி, அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கலக்கி நெய் தடவி சிறு கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் பூண்டு இஞ்சியை போட்டு வதக்கவும், எண்ணெய் பிரியும்போது நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா சாமான்கள், மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, 2 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின் கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி கரைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இதை சப்பாத்தி, புரோட்டாவிற்கு பரிமாறலாம்.