முட்டை கார தோசை செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – ஆறு
வெங்காயம் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – ஒரு ஸ்பூன்
கடலை மாவு – ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சிறிது சேர்த்து எண்ணெயில் வதக்கி கொள்ளவும்.
அடுத்து கடலை மாவுடன், தண்ணீர் சேர்த்து தளர்த்தியான மாவாக கரைத்து கொள்ளவும். அதனுடன் அடித்து வைத்த முட்டை, வெங்காயம், வதக்கிய பொருட்களை சேர்த்து கலந்து கொள்ளவும். இறுதியில் ரவை தோசை போல மாவை ஊற்றி சுட்டு தயாரிக்கவும். இப்போது சுவையான முட்டை கார தோசை ரெசிபி தயார்.