Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மட்டன் கோலா உருண்டை… சாதத்திற்கு ஏற்ற ரெசிபி…!!

கொத்துக்கறி உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி                     – கால் கிலோ
வற்றல்                                   – ஆறு
கொத்தமல்லி                     – 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்                     – ஒரு தேக்கரண்டி
வெங்காயம்                        – 1 பெரியது
தேங்காய்                             – ஒரு மூடி
கசகசா                                  – ஒரு தேக்கரண்டி
பட்டை                                    – ஒரு அங்குலம்
கிராம்பு                                 –  3
ஏலக்காய்                             – 2
முந்திரிப்பருப்பு                – ஆறு
எலுமிச்சம்பழம்                – அரை மூடி

செய்முறை:

வாணலியில் வற்றல் ஆறு, கொத்தமல்லி 2 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, வெங்காயம் 1 பெரியது, கசகசா ஒரு தேக்கரண்டி, முந்திரிப்பருப்பு ஆறு என அனைத்தையும் வறுத்து, பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்.

குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் 1/4 கிலோ கொத்துக்கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கி உப்பு போட்டு உரலில் நன்றாக ஆட்ட வேண்டும்.

அதனுடன் அரைத்த மசாலாவில் பாதியை போட்டு, ஒரு முட்டையையும் ஊற்றி கறி கலவையை  நன்றாக கலந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியில்  இரண்டு கரண்டி எண்ணெய், 2 கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, புதினா, மல்லி, பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி மீதி மசாலாவை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலில் கலந்து ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

அதன் பின் குழம்பு கொதிக்கும் போது, மேற்படி உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும். குழம்பை கிண்டாமல் 2 கொதி கொதித்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். இறுதியில் பாதி மூடி எலும்பிச்சைப்பழ சாறு பிழியவும். சுவையான கொத்துக்கறி உருண்டை குழம்பு ரெசிபி தயார்.

Categories

Tech |