Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈவினிங் ஸ்னாக்ஸ்… non-veg கட்லெட் ரெசிபி…!!

கறி கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி             – கால் கிலோ
ரஸ்க்                                – 5
எலுமிச்சம்பழம்         – அரை மூடி
டால்டா                           – 200 கிராம்
உருளைக்கிழங்கு     – கால் கிலோ
முட்டை                           – 2
மல்லி இலை
வற்றல் தூள்                 – 2 தேக்கரண்டி
பூண்டு                             – 5 பல்
இஞ்சி                               – சிறிது
பெரிய வெங்காயம் – 5
பட்டை, கிராம்பு         – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்து, உப்பு போட்டு உதிர்த்து வைக்கவும். பின்பு கொத்துக்கறியுடன், எலுமிச்சை பழம் பிழிந்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

பின் அதனை தண்ணீர் இல்லாமல் வதக்கி உரலில் போட்டு ஆட்டி, அதனுடன் வற்றல் தூள், கறி மசாலா பொடி, உருளைக்கிழங்கு கலந்து நன்றாக பிசையவும்.

மேலும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கிய மல்லி செடி ஒரு கரண்டியை எண்ணெயில் வதக்கி, அதையும் கறிவுடன் சேர்த்து பிசைந்து சிறிது கனமான வடிவத்தில் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி மைதா மாவு 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, உப்புத்தூள் சிறுது போட்டு நன்றாக அடித்து வைக்கவும். ரஸ்க் தூள் செய்து ஒரு தட்டில் வைக்கவும்.

பின்பு கலவையை, தயார் செய்து வைத்திருக்கும் முட்டையில் தோய்த்து, ரஸ்க் டால்டாவில் போட்டு பொரித்து எடுக்கவும் அல்லது தோசை சட்டியில் சுற்றி சிறிது டால்டாவை ஊற்றி திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். இப்போது சுவையான கறி கட்லெட் தயார்.

Categories

Tech |