Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தந்தூரி மீன்… சுவைக்க சுவைக்க சலிக்காது…!!

தந்தூரி மீன் செய்ய தேவையான பொருட்கள்:

சீலா மீன்                        – ஒரு கிலோ
தயிர்                                 – ஒரு கப்
சின்ன வெங்காயம்  – 2
எலுமிச்சம்பழம்         – ஒன்று
நல்லெண்ணை          – பொரிக்கும் அளவு
முந்திரிப் பருப்பு        – ஒரு மேசைக்கரண்டி
உப்பு                                 – தேவையான அளவு
இஞ்சி                               – ஒரு அங்குல அளவு
பட்டை                             – ஒரு துண்டு
பூண்டு                             – 4 பல்
பிரிஞ்சி இலை            – சிவப்பு நிறம் கால் தேக்கரண்டி

செய்முறை:

மீனை கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டாக வெட்டவும். அதனுடன வெங்காயம், பிரிஞ்சி இலை பட்டை, இஞ்சிப்பூண்டு, ஏலம், முந்திரி பருப்பு யாவற்றையும் அரைத்து, அதில் உப்பு, சிவப்பு நிறம் சேர்த்து, எலுமிச்சை பழம் பிழிந்து தயிரில் கலந்து மீனை அதில் புரட்டி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.

அதனை அடுப்பிலோ அல்லது பேக்கிங் அடுப்பிலோ இந்த துண்டுகளை சுட்டு எடுக்கவும். சுடும் போது அவற்றின் மீது எண்ணெய் தடவிக் கொண்டே இருக்கவும். தந்தூரி மீன் தயார்.

Categories

Tech |