சீனிக்கிழங்கு புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
சீனிக்கிழங்கு – 4
வெங்காயம், – தேவையான அளவு
பச்சை மிளகாய் – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய்ப்பூ – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
உளுந்தம் – தேவையான அளவு
பருப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
சீனிக்கிழங்கை எடுத்து சுத்தம் செய்து தோல் நீக்கி அதை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்.தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வேக வைத்து மூடிவைக்கவும்.
பின்னர் வேக வைத்த கிழங்கு நன்கு வெந்து இறக்க போகும் நிலையில், துருவிய தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கி பரிமாறினால் சுவையான சீனிக்கிழங்கு புட்டு ரெடி. கடைசியில் இறக்கும் போது ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து கிளறி இறககினால் மிகுந்த சுவையாக இருக்கும்.