புளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் – சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் புளி, உப்பு கலந்து சாம்பார் பொடியையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் கலக்கிய குழம்பை ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு குழம்பு நன்கு சுண்டியதும் இறக்கவும். இப்போது சுவையான புளி குழம்பு தயார்.