தப்பாளம் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – தேவையான அளவு
கத்தரிக்காய் – தேவையான அளவு
முருங்கைக்காய் – தேவையான அளவு
கீரைத்தண்டு – 1
மொச்சைக்கொட்டை – அரை கப்
மாங்காய் – 1
தேங்காய் – அரைமூடி
பூண்டு – தேவைக்கேற்ப
வடவம் – தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் – தேவைக்கேற்ப
தக்காளி – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் வாழைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை தண்டு, மாங்காய், தக்காளியை துண்டு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் மொச்சைக் கொட்டையை சேர்த்து தனியே வேக வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் புளியை கரைத்து கொள்ளவும்.
தேங்காயை எடுத்து சின்னதாக நறுக்கி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் தண்ணீர் ஊற்றி வெட்டிய காய்களுடன், உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின்பு வேகவைத்த காய்களுடன் புளி கரைத்து ஊற்றி வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி கொதித்ததும் இறக்கினால் சுவையான தப்பாளம் குழம்பு ரெடி.