தக்காளி பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – கால் கிலோ
பெரிய வெங்காயம் – கால் கிலோ
வர மிளகாய் – 2
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையானது
எண்ணெய் – 25 கிராம்
செய்முறை:
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடிப்பொடியாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். வர மிளகாயை மிக்ஸியில் போட்டு மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, அதனுடன் வெங்காயம், மிளகாய் விழுது, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். இறுதியில் உப்பு சேர்த்த படி நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவும். இந்த பச்சடியை இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.