Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

friday special…வெஜிடபிள் பிரியாணி…ரெசிபி…!!

வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்: 

கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் – 100 தலா
பூண்டு, பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், சின்ன சீரகம், முந்திரி, பச்சை மிளகாய்- தேவைக்கேற்ப
எண்ணெய்                       – 500
நெய்                                     – 50
தக்காளி,வெங்காயம் – தலா 50

செய்யும் முறை:

முதலில் காய்களை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். பின்பு இஞ்சிப்பூண்டையும், தேங்காயையும் தனியாக அரைத்து கொள்ளவும்.

முந்திரியை அரைத்து, பட்டை, கிராம்பு, சீரகத்தை தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கர் வைத்து என்ணெய்யும், நெய்யையும் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், புதினா எல்லாவற்றையும் சிவக்க வதக்கவும். பிறகு அரைத்து பட்டை, இஞ்சி சேர்த்து சிவக்க வைக்கி இறக்கவும்.

அதனை தொடர்ந்து தேங்காய் பால், அரை கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். பின்னர் காய் வெந்ததும், அரிசியை களைந்து போட்டு, மல்லி தலை, முந்திரி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின்பு 5 நிமிடம் கழித்து நெய் ஊற்றி கிளறினால் சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி.

Categories

Tech |