Categories
மாநில செய்திகள்

லிஃப்ட் கேட்ட சிறுமி…10 கயவர்களுக்கு பலியான கொடுமை…!!

காரில் லிப்ட் கேட்ட சிறுமியை அழைத்து சென்று 10 பேர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தில் உள்ள திமிரா என்று கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜூலை 21ஆம் தேதி காரில் லிப்ட் கேட்டு உள்ளார். அவருக்கு லிப்ட் கொடுத்து அருகில் உள்ள வனப்பகுதி இருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காரில் இருந்த 4 பேர் உட்பட 10 பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

இதுகுறித்து திரிபுராவின் வடக்குப்பகுதி பிஐஜி சௌமித்ரா தார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ” இதுவரை இந்த வழக்கு தொடர்புடைய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் இரண்டு பேர் தலைமறைவாகி உள்ளனர்” என தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது341,376(D) மற்றும்4(1) என்ற பிரிவுகளில் போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |