Categories
உலக செய்திகள்

“இன்று விண்ணில் ஏவப்படுகிறது!”….. லைட்-1’ நானோ செயற்கைக்கோள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் சேர்ந்து உருவாக்கிய லைட்-1 என்ற நானோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருக்கும் கலீபா எனும் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பில், அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் செய்து கொண்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளின் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு நாடுகளின் கூட்டமைப்பில் லைட்-1 என்னும் நானோ செயற்கைக்கோள் இன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செயற்கைக்கோளை, அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழகம், அமீரகத்தில் இருக்கும் கலீபா பல்கலைகழகம் மற்றும் பக்ரைன் நாட்டின் பொறியாளர்கள் என்று மொத்தமாக சுமார் 23 நபர்கள் சேர்ந்து குழுவாக தயாரித்திருக்கிறார்கள்.

இதில் 14 நபர்கள் அமீரகத்தின் பல்கலைகழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோளானது, வானத்தில் இருக்கும் தாழ்வான குமுலஸ் மேகங்களில் உண்டாகும் மாற்றங்களை ஆய்வு செய்யும்.

மேலும் வளிமண்டலத்தின் காமா கதிர்வீச்சையும், இடி, மின்னல் தொடர்பான கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும். அமீரகத்தின் விண்வெளி அமைப்பும், பக்ரைன் நாட்டின் தேசிய விண்வெளி அறிவியல் அமைப்பும் இதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறது.
பெரிய செயற்கைக்கோளுக்கு சிறிதும் சளைக்காத விதமாக, மிக சக்தி வாய்ந்த  தொழில்நுட்பங்கள் இதில் இருக்கிறது. அமெரிக்க நாட்டின், ‘ஸ்பேஸ் எக்ஸ் சி.ஆர்.எஸ்-24’ என்னும் விண்கலத்தில் இந்த செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று,  ‘பால்கன்-9’ என்ற ராக்கெட்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |