தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாக்கக்கூடும்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் 3 தினங்களுக்கு காலை11.30 முதல் பிற்பகல் 3.30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வறண்ட வானிலை காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறியுள்ளது. மேலும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.