கார்த்திகை தீபம் அன்னைக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும், வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். கார்த்திகை தீபத்தை நாம் மூன்று நாட்கள் கொண்டாடுவோம். ஒன்று பரணி , இன்னொரு திருக்கார்த்திகை மற்றொன்று ஊர் கார்த்திகை என்று சொல்வார்கள்.
நாம் திருக்கார்த்திகை கொண்டாடுவதற்கு முன்னாடி நாள் அனைத்து வீடுகளிலும் பரணி தீபம் ஏற்றுவோம். பரணி அன்னைக்கு நாம வீட்டில் விளக்கு ஏற்றுவது ரொம்ப நல்லது. அதிகமான விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வாசலில் இரண்டு அகல் விளக்கும், பூஜை அறையில் இரண்டு அகல் விளக்கு ஏற்றி வைத்தால் போதும்.
பரணிக்கு அடுத்த நாள் திருக்கார்த்திகை. கார்த்திகை தீபம் அன்று நம் வீட்டில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டிலே ஏற்கனவே நிறைய அகல்விளக்கு இருந்தால் பரவாயில்லை. ஒவ்வொரு வருஷமும் நாம கார்த்திகை தீபம் அன்று புதுசா கொஞ்ச அகல் விளக்காவது நாம வாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு 5 விளக்கு , 7 விளக்கு , 9 விளக்காவது நீங்க வருஷ வருஷம் புதுசு வாங்க வேண்டும். அகல் விளக்க நன்றாக கழுவி , சுத்தம் பண்ணி , அகல் விளக்கிற்கு மஞ்சள் , குங்குமம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும் வேண்டும்.
முதல்ல எப்போதுமே விளக்குஏற்றுவதாக இருந்தால் எண்ணையை ஊற்றி அதற்கப்புறம்தான் திரியை போடவேண்டும். எப்போதுமே இரண்டு திரியாக தான் போட வேண்டும். நாம் எவ்வளவு விளக்கு ஏற்றுவதாக இருந்தாலும் இரண்டு திரி போட்டுதான் நாமே தீபம் ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் 27 விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் ? என்றால் வீட்டில் இந்த இடத்தில் எல்லாம் அவசியம் விளக்கு ஏற்றிவைக்க வேண்டும் என்பதனால் அப்படி சொல்லி இருக்காங்க.
வீட்டு வாசலில் கோலம் போட்டு அந்த இடத்தில்5 தீபம் ஏற்ற வேண்டும். வீட்டு முற்றத்துக்குள்ள 5 தீபம். சமையலறையில் 1 தீபம். நடையில் 2 தீபம். பின்கட்டில் அதாவது வீட்டின் பின்புறம் 4 தீபம். திண்ணையில் 4 தீபம் ஏற்ற வேண்டும். மாடக்குழியில் 2 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வாசல்படிக்கு 2 தீபம் ஏற்றிவைக்க வேண்டும். பூஜை அறையில் 2 அகல் விளக்கேற்றி வைக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில யம தீபம் 1 ஏற்றி வைக்க வேண்டும்.இந்த இடத்தில் எல்லாம் கண்டிப்பாக நாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதனாலதான் குறைந்தபட்சம் நாம் 27 தீபம் திருக்கார்த்திகை ஏற்றி வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்க.
ஆனால் நாம இப்ப இருக்குற காலகட்டத்துல நம்ம வீட்டுக்கு கொள்ள புறமும் இருக்காது , வீட்டு வாசல்ல திண்ணை , மாடக்குழி , முற்றம் எதுவுமே இருக்காது. அதனால் குறைந்தபட்சம் நீங்க 27 தீபம் உங்க வீட்டில் ஏற்றுங்க . நீங்க எவ்வளவு தீபம் வேண்டுமானாலும் ஏற்றலாம். நூற்றுக்கணக்கான தீபம் ஏற்றலாம். உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு எண்ணிக்கையே இல்லை. குறைந்த பட்சம் இந்த இடத்தில் எல்லாம் நாம் இவ்வளவு தீபமாவது ஏற்றி வைக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்காங்க. எப்பவுமே விளக்கேற்றும் போது வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்துவிட்டு அதன் பிறகு உள்ளே போய் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். வாசலில் இருந்து தான் நாம் மகாலட்சுமியே வீட்டுக்குக் கொண்டுபோக முடியும் அதனால் வாசலில் தீபம் ஏற்றி வைத்து விட்டு உள்ள போய் தீபம் ஏற்றலாம்.