ஹாம்ப்ஷயர் பகுதியில் மின்னல் தாக்கியதால் 2 குடியிருப்புகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவென்யூ, ஹாம்ப்ஷயர் மற்றும் மெர்சியா போன்ற பகுதியை சேர்ந்த மக்கள் இன்று காலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டுள்ளனர். 2 குடியிருப்புகள் மின்னல் தாக்கியதில் தீயில் கருகியது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் புயல் தாக்கியதால் இவ்வாறு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தீப்பற்றி எரிந்த ஒரு வீட்டிலிருந்து 70 வயதான மூதாட்டி ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். மேலும் அப்பகுதியை சேர்ந்த பல மக்கள் இடி மின்னலின் அதிக சத்தத்தால் பதறிப்போய் தூக்கத்திலிருந்து எழுந்ததாக கூறுயிருக்கிறார்கள்.