Categories
உலக செய்திகள்

நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில்…. கார் ஓட்டும் 5 வயது சிறுவன்…. பதைபதைக்கும் வீடியோ…!!

சிறுவன் ஒருவன் தனியாக நெடுஞ்சாலையில் கார் ஒட்டி செல்லும் வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் பரபரப்பான பைபாஸ் ஒன்றில் எஸ்யூவி வகை சொசுகு காரை தனியாக ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 27 விநாடிகள் ஓடும் அந்தக் காணொளியில், கருப்பு டொயோட்டா லேண்ட் குரூசர் காரின் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் அந்த சிறுவன் நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் காருக்குள் பெரியவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.

சிறுவன் கார் ஓட்டி செல்லும் சாலை முல்தானில் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். இருப்பினும் இதில் பெரும் ஆச்சர்யம் என்னவென்றால், சிறுவன் ஓட்டிய அந்த காரை எந்தவொரு போக்குவரத்து காவலரும் நிறுத்தவில்லை. இந்நிலையில் கார் ஒட்டிய அந்த சிறுவனின் பெற்றோரைக் கண்டுபிடிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அருகில் யாரும் இல்லாமல் இப்படி சிறுவன் கார் ஓட்டி செல்லும் வீடியோகாண்போரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Categories

Tech |