ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி தொடர்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று ஆடுமேய்க்க சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்த குஞ்சரம்(48) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மருதூரை சேர்ந்த முருகன்(43) என்பவரும் வயலுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.