Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் இருப்பது போன்று…” தலையிலும் பருவு வருகிறதா”..? இதனை போக்க எளிய வழிமுறை இதோ..!!!

முகத்தில் போலவே தலையிலும் பருவு வருகிறதா அப்படி வந்தால் என்ன வைத்தியம் செய்து சரி செய்யலாம் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.

சருமத்தில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக பருக்கள் முகத்தில் உண்டாகின்றது. சருமத்துளைகள் அடைக்கப்படும் போது பாக்டீரியாக்கள் உருவாக்கி பருக்களை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் முகப்பரு. முகத்தில் தோன்றும் பருக்கள் அவ்வளவு சீக்கிரம் போவதில்லை. ஏதாவது க்ரீம்களை பயன்படுத்தி போக செய்தால்கூட அதன் தழும்புகள் அப்படியே இருக்கும்.

சருமத்தில் தோன்றும் பருக்கள் சரி, தலையில் தோன்றும் பருக்களும் சரி மிகுந்த வேதனையை அளிப்பது உண்டு. சிவந்து போய், சீழ்வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தலையில் ஏற்படும் பருக்களுக்கு காரணம் ஃபோலிகுலிடிஸ் என்பது அடிப்படையில் மயிர்க்கால்களில் ஏற்படும் அழற்சி ஆகும். நீங்கள் முடிகளை ஷேவிங் மற்றும் வாசிங் செய்யும் போது இந்த வகை பருக்கள் ஏற்படுகிறது. பழைய ரேஸரை பயன்படுத்தி முடியை எடுக்கும் போது இந்த வகை பருக்கள் உண்டாகிறது.

முடி இருக்கும் உடலின் எந்தப் பகுதியிலும் மயிர்க்கால்களைச் சுற்றி ஒரு சீழ் கொதி உருவாகி ஃபோலிகுலிடிஸை உண்டாக்குகிறது. இந்த வகை பருக்கள் கைகள், முதுகு மற்றும் கால்களில் ஏற்படுகிறது. இந்த வகை பருக்களை போக்க ஆன்டி பாக்டீரியல் க்ரீம்களை சரும மருத்துவர் பரிந்துரைப்பார். மெழுகு மற்றும் ஷேவிங் முறைகள் உங்களுக்கு ஃபோலிகுலிடிஸை ஏற்படுத்தினால் லேசர் முடி அகற்றும் முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்றால் தலையில் பருக்களானது உண்டாகிறது. இந்த பருக்கள் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பூஞ்சை முகப்பரு வகை நெற்றி, தோள்கள், முதுகு மற்றும் கழுத்தில் காணப்படுகிறது. இந்த பூஞ்சை பருக்களை பாடிவாஷ், தலையில் ஷாம்பு கொண்டு தேய்த்து குளிப்பதன் மூலம் போக்கலாம். நீங்கள் சரும நிபுணரை சந்தித்து சிகிச்சையை கூட மேற்கொள்ளலாம்.

வியர்வையான ஆடைகளை அணிவதை தவிருங்கள் , உடற்பயிற்சி செய்யும் போது ஜிம் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள், உங்கள் முகத்தை நீர் கொண்டு கழுவவும், நீங்கள் வேலை செய்தவுடன் இரண்டு முறை குளிக்க மறக்காதீர்கள். இதன் மூலம் இந்த பூஞ்சை பருக்களை விரட்ட முடியும்.

Categories

Tech |