சென்னையில் இன்று 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான சிறப்பு படங்கள் திரையிடப்படும். அதன்படி 51 நாடுகளில் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாரிசு என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவரை ஒதுக்க கூடாது. மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியைப் போன்று உதயநிதி ஸ்டாலினிடமும் அதிக அளவிலான திறமைகள் இருக்கிறது என்று கூறினார்.