Categories
அரசியல் மாநில செய்திகள்

கூலி ஆட்களை போல… இனிமேல் ஓபிஎஸ்-ஐ பேசாதீங்க..! ஈபிஎஸ் கோஷ்டிக்கு எச்சரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கேபி முனுசாமிக்கு மட்டுமல்ல, அவர்களோடு இருக்கின்ற யாருக்கும் தகுதியும் கிடையாது, உரிமையும் கிடையாது, ஓபிஎஸ்ஸை பற்றி பேசுவதற்கு யோக்கியதை இல்லாத இவர்கள்,  பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டும்.

அண்ணா திமுகவினுடைய தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எடப்பாடியோடு இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள்.. நான்கரை ஆண்டு ஆட்சி செய்த காலத்தில் கொள்ளையடித்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்தால், அந்த நடவடிக்கை எடுக்கின்றபோது, ஏதோ கூலி ஆட்களைப் போல கட்சித் தொண்டர்களை…

இவர்கள் அடியாட்களை போல தொண்டர்களை வீட்டிற்கு முன்னால் பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொண்டர்களை கட்சியினுடைய எஜமானர்கள் என்று சொன்னார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் இழிவாக நடத்துவதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடத்தில் எந்த தொண்டனாவது நேரிலே சென்று நீங்கள் 2017இல் அம்மா அவர்கள் 28 ஆண்டுகாலம் நிரந்தர பொதுச் செயலாளர்களாக இருந்த பதவியில் நீங்கள் அமருங்கள் என்று யாராவது சொன்னார்களா? எப்போது சொன்னார்கள்? அம்மா அவர்களை 28 ஆண்டுகாலம் நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொல்லிவிட்டோம், அந்த பதவியில் நாம் யாரும் அமரக்கூடாது என்கின்ற எண்ணத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்தோம் என தெரிவித்தார்.

Categories

Tech |