ட்ரம்ப் தரப்பு மீண்டும் ஜோபைடன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து பல வாரங்களாக ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் ட்ரம்ப் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ட்ரம்ப் போட்ட அனைத்து வழக்குகளும் கிட்டதட்ட தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து ட்ரம்ப் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகங்கள் எழுந்தது.
இறுதியாக ட்ரம்ப் ஆட்சி மாற்றத்திற்கு இசைவு கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வந்தன. ஆனாலும் தேர்தல் முடிவுகளை மாற்ற மகான அரசாங்கங்களுக்கும், ஆளுநர்களுக்கும் அழுத்தம் தருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தோற்றுப்போன முக்கியமான 4 மாகாணங்களின் முடிவுகளை மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இதற்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் மற்ற வழக்குகளைப்போல இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.