சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடியும் தருவாயில் இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை எங்களுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கிடப்பில் போட்டுள்ளது. திட்டம் எப்படி முடிவடைந்தாலும் அதிமுக தான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது என்பதை மாற்ற முடியாது. அதன் பிறகு மக்கள் நலனில் அக்கறை இல்லாத பொம்மை முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத பொம்மை முதல்வராக இருக்கிறார். ஊழல் செய்வதிலும் சூப்பர் முதல்வராக இருக்கிறார்.
ராஜ பரம்பரை போல் முதல்வர் ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதிக்கு முடிசூட்டிவிட்டார். ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் கருணாநிதி குடும்பம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் திட்டத்தை தொடங்கி வைக்கும்போது வயதில் அனுபவம் இல்லாத உதயநிதி முன் நின்று திட்டத்தை தொடங்க மூத்த அமைச்சர் ஐ. பெரியசாமி அருகில் நின்று வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். அதன் பிறகு அமைச்சர் கே.என் நேரு உதயநிதி மட்டுமல்ல அவருடைய மகன் இன்பநிதியை கூட நாங்கள் வரவேற்போம் என்று கூறியுள்ளார். அடிமைத்தனத்திற்கு ஓரு அளவே இல்லாமல் போய்விட்டது. மேலும் இப்படிப்பட்ட அமைச்சர்களால் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கப்போவது கிடையாது என்று கூறினார்.