Categories
மாநில செய்திகள்

“குஜராத் சம்பவத்தை போன்று விதி என்று ஒதுங்கவில்லை”…. தவறை ஒத்துக் கொண்டு சரி செய்கிறோம்…. அமைச்சர் மா.சு அதிரடி…..!!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொசுவலைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்ட பிறகுதான் உடற்கூறாய்வு நடந்தது. மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தலை மறைவாக இருப்பதால் அவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்து நடந்ததில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தை கடவுளின் விதி என்று கூறி தப்பித்தது போன்று நாங்கள் தப்பிக்கவில்லை. கவன குறைவு காரணமாகத்தான் நடந்தது என்று தெரிந்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மக்கள் முன்னால் வெளிப்படையாக கொண்டு வந்து காட்டுவோம் என்று கூறியுள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மக்களுக்கு 2,60,000 கொசுவலைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதோடு, தொடர்ச்சியாக 55 நாட்களுக்கு மருத்துவ முகாம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |