Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே…. இந்த லிங்கை தொட்றாதீங்க….. வெளியான பரபரப்பு அறிவிப்பு….!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வங்கி சார்பில் வெளியாகியுள்ளது. 

சமீப நாட்களாகவே வங்கிகள் மக்களுக்கு தொடர் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக வங்கி பெயரை பயன்படுத்தி மெசேஜோ அல்லது காலோ வந்தால் அதை முடிந்த அளவிற்கு சூதானமாக கையாளவேண்டும். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வங்கி தகவலையும், ஓடிடி மெசேஜ்களையும் பகிர வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,

எஸ்பிஐ தங்கள் வங்கி பெயரில் ஹேக்கர்கள் போலி மின்னஞ்சல்களை அனுப்புவதாக தற்போது எச்சரித்துள்ளது. எஸ்பிஐ பெயரில் வரும் போலி மின்னஞ்சலில் வங்கியின் பெயரில் லிங்குகள் இருப்பதாகவும், அதனை வாடிக்கையாளர்கள் கிளிக் செய்தால் அவர்களது தகவல் திருடப்பட்டு பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஹேக்கர்கள் லிங்குகளை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அனுப்பி வருகிறார்கள். யாரும் அதனை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மின்னஞ்சல் வந்தால் உடனடியாக புகார் அளிக்கவும்  வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த விஷயத்தை மிக கவனமாக கையாள வேண்டும். 

Categories

Tech |