லிங்க்ட்இன் என்பது தொழில்வல்லுநர்களுக்குரிய சமூக ஊடகத் தளம். இது மக்கள் தங்களது துறையை சேர்ந்தவர்களுடன் இணையவும், புது பணியாளர்களைத் தேடவும் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கண்டறியவும் வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் ஆகும். புது பணிக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் (அ) தொழில் வல்லுநர்கள் சாத்தியமான நபர்களை நேரடியாக தளத்தின் வாயிலாக தொடர்புக் கொள்ளலாம். அடிக்கடி பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக லிங்க்ட்இன் உள்ளதால் ஸ்கேமர்கள் இத்தளத்தை குறிவைத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் நம்பகத்தன்மையை பெற்ற தளமாக இருப்பதும் மற்றொரு காரணம் ஆகும். இவற்றில் கனவுகளுடன் உள்ள இளைஞர்கள் உலகின் எந்த மூலையில் இருக்கும் வேலையையும் அறிந்துக்கொள்ளலாம். எனினும் அதில் யாரை தொடர்புக்கொள்கிறோம் என்பதில் யூசர்கள் கவனமாக இருக்கவேண்டும். தற்போது பொதுவாக நடைபெறும் மோசடிகள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.
கேட்பிஷர்கள்
கேட்பிஷிங் என்பது மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்வுஅல்ல. மோசடி செய்பவர்கள் மற்றவர்களை ஏமாற்றி தனிப்பட்ட தகவல்களை திருடவும், பணத்தை பெறவும் ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ் ஆகியவர்களுடன் தொடர்பு இருப்பது போன்று காட்டிக்கொள்வார்கள். அத்துடன் அவர்களின் பெயர்களில் போலிக்கணக்குகளை உருவாக்கி உங்களுடன் உரையாடுவார்கள்.
பிஷிங்மோசடிகள்
நீங்கள் ஒரு வேலையை அறிந்தால், உங்களது தனிப்பட்ட தகவல்களை அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு ஒப்பந்தத்துக்கு உங்களது வங்கி விபரங்கள் (அ) சமூகப்பாதுகாப்பு எண் ஆகிய தரவு தேவைப்படும். இதை குறி வைத்து ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதற்காக மோசடி வேலைவாய்ப்பை உருவாக்கி, உங்களை இந்த தளம் வாயிலாக தொடர்புக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
போலி வேலைவாய்ப்புகள்
போலி வேலைவாய்ப்புகளை கொடுத்து, அதாவது ப்ரீலேன்சர் வாய்ப்பு கொடுப்பதாக கூறி உங்களிடமிருந்து வேலையை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுக்கமாட்டார்கள். அத்துடன் செய்த வேலைக்குரிய ஊதியம் கிடைக்காததால் நீங்கள் விரக்தியடையகூடும்.
தவறான லிங்குகள்
லிங்க்இன் தளத்தில் ஏதேனும் சிக்கல் இருப்பின் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என கூறுவர். அத்துடன் கவர்ச்சிகரமான ஆஃபர்கள், வேலைவாய்ப்புடன் லிங்கை அனுப்புவர். அதனை கிளிக் செய்வதற்கு முன்பு உஷாராக இருக்கவேண்டும். இல்லையெனில் உங்களது மொபைல் (அ) லேப்டாப்பில் ஸ்கேமர்கள் ஊடுருவி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.