ஒரு சிங்கக்குட்டி தன் தாய் சிங்கத்தை பின்புறம் இருந்து பயமுறுத்தும் அழகான வீடியோ, இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக காடுகளில் சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற மிருகங்கள் பதுங்கி ஓடிவிடும். ஆனால் அந்த சிங்கமே, தன் குட்டியை பார்த்து பயந்திருக்கிறது. அந்த வீடியோ தான் இணையதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு பெண் சிங்கம் தரையில் படுத்திருக்கிறது. அதன் குட்டிகள் இரண்டும் அருகில் இருக்கின்றன.
https://twitter.com/Yoda4ever/status/1576273237402537984
அதில் ஒரு குட்டி தாய் சிங்கத்தின் முன்புறத்தில் இருக்கிறது. தாய் சிங்கத்தின் பின்புறத்தில் இருந்து மற்றொரு குட்டி மெதுவாக பதுங்கியவாறு சென்று அதன் மீது பாய்ந்து மிரட்டுகிறது. இதில் பயந்து போன அந்த சிங்கம் உடனே எழுந்து பார்க்கிறது. அதன்பிறகு தன் குட்டி தான் என்று அறிந்தவுடன் அமைதியாக இருந்துவிட்டது.