Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொந்தரவு செய்யாதீர்கள்” விளையாடும் சிங்கவால் குரங்குகள்… வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…!!

சிங்கவால் குரங்குகள் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் தான் அரிய வகை மூலிகை தாவரங்களும், உயிரினங்களும் இருகின்றன. இந்நிலையில் கோடைகாலத்தில் வனபகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மான், காட்டெருமை, சிறுத்தை, யானை, சிங்கவால் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் தேடி அமராவதி அணையை நோக்கி செல்கின்றன.

இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உடுமலை மூணாறு சாலை வழியாக செல்கின்றன. தற்போது ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத காரணத்தினால் அப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இருக்கும் மரங்களில் சிங்கவால் குரங்குகள் விளையாடி கொண்டிருக்கின்றது. எனவே இவ்வழியாக அத்தியாவசிய தேவைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பொறுமையுடன் செல்ல வேண்டும் எனவும், வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது எனவும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |