ரஷ்யா அதிபர் சிங்கங்களை திறந்துவிட்டாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ரஷ்யா அதிபர் கொரோனா பாதிப்பை தடுக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக சுமார் 800 சிங்கங்களை ரோட்டில் நடமாட விட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இது பரவலாக அனைத்து வாட்ஸ்அப்களிலும் வந்திருக்கும்,
நாம் கண்டிருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஏப்ரல் 2014 நடந்த ஒரு ஷூட்டிங் அந்த ஷூட்டிங்கில் இந்த கிளிப் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியே தவிர ரஷ்ய அதிபர் மக்களை அச்சுறுத்துவதற்காக திறந்து விடப்படவில்லை. வாட்ஸ் அப்பில் வந்த இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.