Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுத்தது குத்தமா.?.. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினர் காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள உடையாம்புளி பகுதியில் வெள்ளையன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மாறாந்தை பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையன் வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது   வெள்ளையன் அவரை நிறுத்தி தன்னையும் வீட்டருகில் விடுமாறு கேட்டு அவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி திருப்பத்தி பகுதியில் சென்ற போது பின்னாடி அமர்ந்து இருந்த வெள்ளையன் திடீரென நிலை தடுமாறியதால் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

இதனால் ரமேஷ் உடனடியாக வெள்ளையனை  மருத்துவமனைக்கு அழைத்து செல்ல புறப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு வெள்ளையன் எனக்கு ஒன்றும் ஆகவில்லை என கூறி  தன்னை வீட்டில் விடுமாறு  தெரிவித்துள்ளார். அதன்படி ரமேஷ் வெள்ளையனை வீட்டில்  இறக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனையடுத்து வெள்ளையன் தனது வீட்டில் யாரிடமும், ஏதும் கூறாமல் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளையனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |