குடிபோதையில் இருந்த நபர் வழியில் வந்த பாம்பை பிடித்து கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநிலம் கோலாரில் குடிபோதையில் ஒருவர் பைக் ஓட்டி சென்ற பொழுது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றுள்ளது. அதனை கண்ட பைக் ஓட்டி வந்த நபர் கோபம் கொண்டு இறங்கி சென்று பாம்பை பிடித்து எனது வழியில் வருவியா எனக்கூறி பாம்பை தனது பற்களால் கடித்துக் குதறி உள்ளார். அதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ வைரலாக மாறியுள்ளது மேலும் சிலர் அவர் பாம்பை கடித்து குதறுவதை பார்த்துக் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளனர் ஆனால் குடிபோதையில் இருந்த நபர் அவர்களின் சத்தத்தை பொருட்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபரை விசாரித்து வருகின்றனர்