Categories
மாநில செய்திகள்

“உலர் திராட்சையில் மதுபான கலவை” 60 நாட்களில் 200 கிலோ எடையில் கேக்…. பார்த்தா ஆச்சரியப்படுவீங்க….!!!!

பொதுவாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது இருந்தே கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் ஹோட்டலும் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது சின்னம்பாளையம் பகுதியில் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இந்த நட்சத்திர விடுதியில் வருடம் தோறும் பிரம்மாண்டமான பிளம்கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். அந்த வகையில் நடபாண்டிலும் பிரம்மாண்டமான பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.

இந்நிலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட ஏராளமான உலர் பழ வகைகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் 50-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஒன்று கூடி உலர் திராட்சைகளின் மீது 10-க்கும் மேற்பட்ட உயர்தர மதுபானங்களை ஊற்றினர். இந்த கலவையை அடுத்த 60 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து ப்ளம் கேக் தயாரிப்பார்கள். இந்த கேக் சுமார் 200 கிலோ எடையில் தயாரிக்கப்படும். மேலும் நட்சத்திர விடுதியின் ஊழியர்கள் உலர் திராட்சையில் மதுபானத்தை ஊற்றி பதப்படுத்துவதால் கேக்கின் சுவை வேற லெவலில் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |