Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் மதுவிலக்கு வாக்குறுதி : அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

மதுவிலக்கை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுபான கடைகளை இடமாற்றம் செய்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதை அனைத்தும் சேர்த்து ஒரே அமர்வாக விசாரிக்க வேண்டும் என்பதற்கான தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் போது அதை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் கொண்டு வர முடியுமா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தன.இன்று விசாரணையின் போது மதுபான கடைகள் 35% குறைந்துள்ளது. மதுபானக் கடைகளில் தொடக்க நேரத்தையும் 4 மணி நேரம் குறைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிர்வாக ரீதியில் மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை  அரசு எடுத்து வருகின்றது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது  நீதிபதிகள்  , மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலமே மது விற்பனை செய்வது வேதனையளிக்கிறது. கிராமசபை கூட்டத்தில் மதுக்கடை வேண்டாம் என்று தீர்மானம் போட்டாலும் அரசுக்கு மூடுவதற்கு தயங்குவது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார். மதுபானக்கடைகள் குறைந்திருப்பதாக சொல்லும் தமிழக அரசு, மதுபானம் குடிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று உறுதியளிக்க முடியுமா ? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்ற வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் , கண்டுகொள்வதில்லை என்ற பொதுவான கருத்தை நீதிப்பதிகள் தெரிவித்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Categories

Tech |