சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விற்பனை செய்த நபர்களிடமிருந்து 1,625 மதுபாட்டில்கள் மற்றும் 82,940 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.