இதுவரை இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் குறித்தும் அவரின் ஆண்டு குறித்தும் காண்போம்.
இந்திய நாட்டின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 23_ஆம் தேதி எண்ணப்படட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றி ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்றுள்ளது. பாஜகவின் 17-வது புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து தேர்வு செய்யப்பட்ட பிரதமரின் விவரங்கள் மற்றும் ஆண்டு குறித்து காண்போம்.
1. ஜவஹர்லால் நேரு (15 ஆகஸ்ட் 1947 – 27 மே 1964)
2. குல்சார்லால் நந்தா (27 மே 1964 – 9 ஜூன் 1964) (11 சனவரி 1966 – 24 சனவரி 1966)
3. லால் பகதூர் சாஸ்திரி (9 ஜூன் 1964 – 11 ஜனவரி 1966)
4. இந்திரா காந்தி (24 ஜனவரி 1966 – 4 மார்ச் 1977) (14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984)
5. மொரார்ஜி தேசாய் (24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979)
6. சரண் சிங் (28 ஜூலை 1979 – 14 ஜனவரி 1980)
7. ராஜீவ் காந்தி (31 அக்டோபர் 1984 – 2 டிசம்பர் 1989)
8. விஸ்வநாத் பிரதாப் சிங் (2 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990)
9. சந்திர சேகர் (10 நவம்பர் 1990 – 21 ஜூன் 1991)
10. பி. வி. நரசிம் ராவ் (21 ஜூன் 1991 – 16 மே 1996)
11. அட்டல் பிஹாரி வாஜ்பாயி (16 மே 1996 – 1 ஜூன் 1996) (19 மார்ச் 1998 – 22 மே 2004)
12. எச். டி. தேவே கவுடா (1 ஜூன் 1996 – 21 ஏப்ரல் 1997)
13. இந்தர் குமார் குஜரால் (21 ஏப்ரல் 1997 – 19 மார்ச் 1998)
14. மன்மோகன் சிங் (22 மே 2004 – 26 மே 2014)
15. நரேந்திர மோடி (26 மே 2014 – 30 மே 2019) (20019 மே 31 முதல்