உலகம் முழுவதும் உள்ள பல நகரங்களும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக களை இழந்துள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டு நகரங்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்கள் பலவும் களை இழந்துள்ள நிலையில் ஹாம்பர்க், வியன்னா ஆகிய நகரங்களும் கடந்த வருடத்தை விட மிக மோசமான நிலையில் உள்ளது. அதே சமயம் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா, சூரிச் ஆகிய இரண்டு நகரங்கள் மட்டும் 7 மற்றும் 8-வது இடத்தை பிடித்துள்ளன. மேலும் உலகில் வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் நியூசிலாந்தில் உள்ள ஆக்கலந்து எனும் நகரம் முதலில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் இரண்டாவது இடத்தை ஜப்பானின் ஒசாகா நகரமும், மூன்றாவது இடத்தை அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரமும், நான்காவது இடத்தை நியூசிலாந்தின் இன்னொரு நகரமான வெலிங்டனும் பிடித்துள்ளது. மேலும் முதன்மை நகரங்களின் பட்டியலில் 2018-2020 வரை இடம் பெற்றிருந்த வியன்னா தற்போது 12-வது இடத்திற்கு சென்றுள்ளது. அதேபோல் ஹாம்பர்க் நகரம் போன வருடம் 13-வது இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது 47-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.