Categories
உலக செய்திகள்

கொரோனா கொன்னுடுச்சு… இனி இதை தான் சாப்பிடணும்… சீன அரசு உத்தரவு!

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் பட்டியலை வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் நகரில் தான் முதலில் தோன்றியது. அங்கு இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

இந்நிலையில் சீனாவில் எந்த விலங்குகளை எல்லாம் இறைச்சிக்காக வளர்க்கலாம் எனும் பட்டியலை அந்நாட்டின் வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆடு, கோழி, மாடு, மான், பன்றி, தீக்கோழி மற்றும் ஒட்டக இனத்தை சேர்ந்த அல்பாக்கா உள்ளிட்ட 13 வகை விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என அப்பட்டியலில் தெரிவித்துள்ளது. அதேநேரம் காட்டு எலி, நரி, கீரிப்பிள்ளை ஆகியவற்றையும் வளர்க்கலாம் ஆனால் அதனை இறைச்சிக்கு பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டிருந்தது.

கொரோனா பரவலுக்கு காரணம் என நம்பப்படும் வவ்வால்கள், எறும்பு தின்னி போன்றவை அப்பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோன்று நாய் இனங்களும் பட்டியலில் இல்லை.

Categories

Tech |