பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து, சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ?
என்னை பதில் சொல்லவே விடல. இல்லை இல்ல உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு, டக்குனு போன வச்சுட்டாரு. அதுக்காக எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. திருச்சி சூர்யா போன்ற நபர் பெண்களை வந்து கொச்சைப்படுத்தி பேசும் போது, என்னை.. காயத்ரி ரகுராமாக… ஒரு பெண்ணாக… ஒரு பாஜக நிர்வாகியாக… என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் பாஜகால எட்டு வருஷமா தொடர்ந்து வேலை செஞ்சிட்டு இருக்கேன். யாருக்கும் ஆதரவாளர்… இவங்களோட ஆதரவாளர்…. அவங்க ஆதரவாளர் என கிடையாது. எல்லா லீடர் கிட்டயும் நீங்க கேட்கலாம்.. சிபிஆர் அண்ணன் கிட்டயும் கேட்கலாம், எச். ராஜா அண்ணா கிட்டயும் கேட்கலாம், பொன்னார் அண்ண கிட்டயும் கேட்கலாம், எம்.ஆர் காந்தி அண்ணா கிட்டயும் கேட்கலாம், வானதி அக்கா கிட்ட கேட்கலாம்.
யார்கிட்ட வேணும்னாலும் கேட்கலாம். யார் எந்த வேலை எனக்கு கொடுத்தாலும், ஓகே அக்கா.. நான் பண்றேன் என சொல்லி உடனே பேசி இருக்கேன். பணியை முடித்துவிடுகின்றேன் என சொல்லி இருக்கேனே தவிர, யாருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு சிலருக்கான ஆதரவாளராக இருந்தது கிடையாது என கூறினார் .