Categories
சினிமா தமிழ் சினிமா

அரசின் அறிவுரையை கேளுங்கள்…. தடுப்பூசி எடுத்துக்கொண்ட மோகன்லால் பேச்சு…!!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான மோகன்லால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டேன். அனைவரும் அரசின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும். தடுப்பூசி சமூகத்தின் பாதுகாப்பிற்கு உதவும். கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |