Categories
தேசிய செய்திகள்

தாத்தாவை சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டுமா….? லஞ்சம் கேட்ட மருத்துவ ஊழியர்…. வைரலான 6 வயது பேரனின் செயல்…!!

சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல ரூபாய் 30 கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து பேரன் தள்ளி செல்ல முதியவரின் மகள் முன்னாள் ஸ்ட்ரெச்சரை இழுத்து செல்கின்றார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனையடுத்து பணம் கேட்ட வார்டு உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |