கடற்கரையை நோக்கி டைனோசர்கள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்கள் ஓடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
டைனோசர்களை ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால் அரிதாக குட்டி டைனோசர்கள் கடலை நோக்கி ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் நீளமான கழுத்தோடு சாரோபோட்ஸ் இனத்தைச்சேர்ந்த குட்டி டைனோசர்கள் போல உருவமுடைய உயிரினங்கள் கடல் நீரை நோக்கி ஓடுகிறது.
https://twitter.com/buitengebieden/status/1521943849656016897
ஆனால், அவை டைனோசர்கள் கிடையாது என்றும் கோவாடிமுண்டிஸ் எனப்படும் ஒரு வகை உயிரினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பகல் நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக இயங்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த வகையில், பெரிய கோவாடிஸானது தலையிலிருந்து வால் முனை வரைக்கும் 33 முதல் 69 செ.மீ. நீளமுடையது.