Categories
உலக செய்திகள்

சிறுமியின் உயிர் பலி… “டிக் டாக் செயலிக்கு இத்தாலியில் ஏற்பட்ட சிக்கல்”..!!

சீன மொபைல் செயலி நிறுவனமான டிக் டாக்கை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், ‘பிளாக் அவுட் சேலஞ்ச்’ போட்டியில் பங்கேற்ற 10 வயது இத்தாலிய சிறுமி, இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதையடுத்து டிக்டாக் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ‘எங்கள் தளத்தில் இத்தகைய போட்டி நடப்பதை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. அது எங்கள் கவனத்துக்கும் வரவில்லை’ என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளது. ‘டிக்டாக் நிறுவனம் தங்கள் பயனர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். ஆபத்தான எந்த ஒரு செயலையும் நாங்கள் ஊக்குவிப்பதில்லை’ என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இறந்த மகளின் பெற்றோர் கூறும் போது ‘இப்படி ஒரு வில்லங்கமான போட்டியில் மகள் பங்கேற்பது எங்களுக்கு தெரியாது. இன்னொரு மகள் சொல்லித்தான் தெரியும்’ என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

Categories

Tech |